உடற்பயிற்ச்சி மற்றும் உடற்பயிற்சியின் பயன்கள்

உடற்பயிற்சி

“உடலினை உறுதி செய்” என்பது அவ்வையார் வாக்கு. நம் உடல் உறுதியாக இருப்பதற்கு நல்ல உணவு பழக்கவழக்கம் மற்றும் மன அமைதி மேலும் உடற்பயிற்சியும் இன்றியமையாததாகும்.

*நலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். இளமையிலேயே ௨யிருக்கு ௨லை வைக்கும் நிறையக் கொடிய நோய்கள் வேர் அகற்ற தினமும் ௨டற்பயிற்சி செய்வதை விட மாற்று வழி இல்லை. பல விதமான ஆராய்ச்சி முடிவுகளும் இதைத்தான் கூறுகிறது. உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் தசைகளை வலிமையுறச் செய்யவும் மன அழுத்தம் போன்றவற்றை துரத்தி மன அமைதி மற்றும் நல்ல தூக்கம் தருவதற்ககும் உடற்பயிற்சி அவசியம்.

*உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான சக்தி இல்லை என்பவர்களுக்கு தெரியாத ஒன்று எளிய உடற்பயிற்சிகள் உள்ளன என்றும் உடற்பயிற்சி செய்ய விலை உயர்ந்த கருவிகளோ மையங்களும் தேவையில்லை என்றும் அறியவில்லை.

என்ன பயிற்சி செய்யலாம்

சுறுசுறுப்பாக நடத்தல், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், நடன பயிற்சி என அனைத்து பயிற்சிகளும் நுரையீரல் மற்றும் இதயத் தசைகளை வலுவடையச் செய்கிறது. நாம் இப்பகுதியில் மனச்சோர்வு நீக்கும் நடைபயிற்சி பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் ,நமது எண்ணங்கள் பற்றியும் காண்போம்.
எப்போது உடற்பயிற்சி செய்யலாம்?

அதிகாலையில், வெறும் வயிற்றில் எளிய பயிற்சிகள் செய்யலாம் .ஏனெனில் காலையில் தான் கலோரிகள் தொடர்ந்து எரிக்கும். இதனால் கொழுப்பு விரைவில் கரையும்.

நடைபயிற்சியின் முக்கியத்துவம்

Bioclock என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றாள் அதிகாலை 4 மணிக்கு அலாரம் வைத்து விட்டு தூங்கி விடுவோம்.ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம்.இதுதான் Bioclock.

நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும் 60-70 வயதில் இறந்துவிடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம் என எண்ணுகிறோம். 50 வயதில் எல்லா நோய்களும் வந்துவிடும் என்று நம்பி நமது Bioclok இல் செட் செய்கிறோம். அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய்கள் வருகிறது. எழுபது வயதில் இறந்து விடுகிறோம். நமக்கு தெரியாமலேயே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுகிறோம்.

எண்ணங்கள் தான் வாழ்க்கை

சீனாவில் பெரும்பாலானோர் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது பயோ கிளாக் அப்படி செட் செய்யப்பட்டுள்ளது. எனவே நண்பர்களே நாம் குறைந்தது நூறு வயது வரை வாழ்வோம். என்று பயோ கிளாக் மாற்றி அமைப்போம்.

 • *நமக்கு இந்த சின்ன வயதில் எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.
 • * முடி நரைத்து விட்டால் டை அடியுங்கள். இளமையாக தோற்றம் அளியுங்கள். வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.
 • * சுறுசுறுப்பாக இருங்கள். நடைபயிற்சி செய்யுங்கள்.
 • *வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அதுதான் உண்மை).
 • *எல்லாவற்றுக்கும் இந்த மனது தான் காரணம். Never, ever allow the Bioclock set your ending.

எண்ணங்களே வாழ்க்கை

முதுமை பாதத்திலிருந்து மேல்நோக்கி தொடங்குகிறது.

*உங்கள் கால்களை செயல்பாட்டிலும், வலுவாகவும் வைத்திருங்கள்! keep your legs active and strong!

தினசரி வயதாகிக் கொண்டே இருக்கும்போது,நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும்.நமக்கு தொடர்ந்து வயதாகும்போது நம் தலைமுடி நரைத்து, சருமம் தளர்ந்து அல்லது முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.

* நீண்ட ஆயுளின் அறிகுறிகளில் பிரபலமான அமெரிக்க பத்திரிகை “வருமுன் தடுப்பு”மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள் அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.

* தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள் உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால் உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்களுக்கு குறையும்.அதனால் நடைபயிற்சி செய்யுங்கள்.

வீட்டில் கடைபிடிக்கக் கூடிய எளிய பயிற்சிகள்

 • *வீட்டு வேலைகள், தோட்டம் பராமரித்தலை ஒரு பயிற்சி போல் செய்யலாம்.
 • * லிப்ட் இருந்தால் மாடிப்படி ஏறி செல்லுங்கள்.
 • * கடைக்கு போக சைக்கிள் பயன்படுத்துங்கள்.
 • *வாகனத்தை முடிந்த அளவு தவிர்த்து நடக்க உதவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
 • டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனம் அடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமை அடைவதற்கு சமம். எனவே நடைபயிற்சி செய்திடுங்கள்.
 • கால் தசைகள் பலவீனம் அடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்ட காலம் பிடிக்கும். அதனால் நடை பயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.

நமது ௨டலில் கால்களின் பங்கு

நமது முழு உடல் எடை சுமையை கால்களே தாங்குகிறது. கால்கள் ஒரு வகையான தூண்கள் மனித உடலின் முழு எடையையும் தாங்கும். அதனால் தினமும் நடை பயிற்சி செய்து ஆரோக்கியமாக வைத்து விடுவோம்.

 • * சுவாரசியமாக ஒரு நபரின் எலும்புகளில் 50% தசைகள் இரண்டு கால்களிலும் உள்ளன.
 • * மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.
 • ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல் இரண்டு கால்களால் செய்யப்படுகிறது இது உங்களுக்கு தெரியுமா? ஒரு நபர் இளமையாக இருக்கும்போது அவருடைய தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரை தூக்கம் வலிமை கொண்டவை. கால் உடல் நடமாட்டத்தின் மையமாகும்.
 • *இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும் ,50% ரத்தக் குழாய்களையும், 50 % ரத்தத்தையும், அவற்றின் வழியே பாய்கிறது.இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க் ஆகும்.
 • *கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும் போது,ரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தை கொண்டிருப்பார்கள்.
 • கூடுதலாக எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுகிறது. விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும். இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுக்கு ஆளாகிறார்கள்.
 • 10 ஆயிரம் அடிகள் நடக்க எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதைத் தடுக்கலாம். அல்லது குறைக்கலாம்.
  365 நாட்கள் நடைப்பயிற்சி உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும் உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவு செய்து தினமும் குறைந்தது 30 – 40 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
 • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப தினமும் உடற்பயிற்சி செய்து பல நோய்கள் நம்மை விட்டு விலகிட வழி செய்வோம். உடற்பயிற்சிக்கு என்று கருவிகள் மற்றும் மையங்களுக்கு செல்வதை தவிர்த்து நம் வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய பயிற்சிகளில் ஒன்றான நடைப் பயிற்சியை செய்து ஆரோக்கியமான வாழ்வினை வாழ்வோம்.
உடற்பயிற்ச்சி மற்றும் உடற்பயிற்சியின் பயன்கள்

One thought on “உடற்பயிற்ச்சி மற்றும் உடற்பயிற்சியின் பயன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top