குழந்தைகளுக்கு சிறுதானிய சத்துமாவு பாகம்1

குழந்தைகளுக்கு கொடுக்கப்படவேண்டிய சத்துமாவு

இப்போது பிறந்த குழந்தை முதல் எட்டு வயது குழந்தைகளுக்கான சத்து மாவு எப்படி தயாரிப்பது என்னென்ன தானியங்கள் சேர்த்து இந்த சத்து மாவு தயாரிப்பது என்பதை விரிவாக பார்க்கலாம்.

தானியங்களின் வகைகள்

கம்பு ,பிஸ்தா ,பொட்டுக்கடலை, ஜவ்வரிசி ,வால்நெட், கோதுமை, வெள்ளை சுண்டல், உலர்ந்த பேரிச்சை, சிறிதளவு ஜாதிக்காய், ராகி, நிலக்கடலை போன்ற தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

சத்துக்கள் நிறைந்த உணவாக உட்கொள்ளக்கூடிய சிறு தானியங்கள் பல இருக்கின்றன.

1. கம்பு

சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் பாதிப்பில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்
நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடைய வேண்டும். கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் உள்ளவர்கள் தொடர்ந்து சில காலம் உண்டு வருவதால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் நீக்கும். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் தன் பசியை கட்டுப்படுத்த முடியாமல் உணவை உட்கொள்கிறார்கள் அத்தகையவர்கள் இந்தக் கம்பை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருக்கும்.

ஒரு சிலருக்கு சுற்றுப்புற சூழலாலும் உடலில் ஏற்படும் மாற்றங்களாலும் உடல் சூடு அதிகரித்து அதனால்‌ சில பாதிப்புகளைச் சந்திக்கின்றனர் இத்தகையவர்கள் தினமும் இந்த கம்முனு நூலை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.

2. பிஸ்தா

இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல புரதச்சத்தில் ஒன்றான வைட்டமின் பி6 உதவுகின்றது இந்த வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது எனவே இதனை தினமும் பிஸ்தாவை எடுத்து கொள்வதால் இரத்தத்தில் ஆக்சன் அளவில் நிலையாக இருக்கும் உடல் சோர்வு ஏற்படாது. பிஸ்தா உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை உறுதிப்படுத்துகிறது இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் வலுவாக இருக்க இந்த பித்தம் உதவுகிறது.

மூளைக்கு வேலை கொடுப்பது மூலம் உடல் சோர்வு இருக்காது அதனால் தினமும் பிஸ்தா சாப்பிட்டு வருவதன் மூலம் பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ வைட்டமின் ஈ சத்துக்களும் நம் மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்கும் அதனால் உடல் சோர்வை தவிர்க்கலாம். இந்த பிஸ்தா பருப்பை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் கண்புரை வராமல் தடுக்கின்றது அதுபோன்று கண்ணுக்கு தெளிவான பார்வையை கொடுக்கக்கூடியது

3. பொட்டுக்கடலை

உடைத்த பொட்டுக் கடலை பருப்பில் அதிக அளவு புரதங்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்திருப்பதால் இதை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் எலும்புகள் மற்றும் தசை நரம்புகள் வலிமை பெற்று உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகிறது நீண்ட நேரம் கடிதம் உழைப்பில் ஈடுபடுவர்கள் இந்த பொட்டுக்கடலை பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக சக்தியை கொடுக்கக்கூடிய ஆற்றல் இந்தப் பொட்டுக்கடலையில் உள்ளது.

4. வால்நட்

ஒமேகா த்ரீ ஃபேட்டி அமிலங்கள் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி கொண்ட இந்த வால்நட் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை உருவாக்கி இதயம் சீராக இயங்க உதவுகின்றது. ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் இந்த வால்நட் தினமும் சாப்பிட்டு வரவேண்டும்.

5. ஜவ்வரிசி

ஜவ்வரிசியில் பொட்டாசியம் உள்ளது இந்த ஜவ்வரிசி ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக நிகழ உதவி செய்கிறது. இந்த ஜவ்வரிசி இதயத்தின் ரத்த ஓட்டத்தை கட்டுக்குள் வைக்கிறது இதயத்தின் ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருப்பதாக இதயத்தில் உள்ள மன அழுத்தம் குறைகிறது.

6. உலர்ந்த பேரிச்சம்

இந்த உலர்ந்த பேரிச்சம் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள். இதில் பினோலிக்ஸ் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகமாக உள்ளது. இவை மட்டுமின்றி, பேரிச்சையில் இரும்புச் சத்து, பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, டயட்டரி பைபர், புரதச் சத்து, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்துகள் ஏராளமாக உள்ளது.

7. கோதுமை

உலகில் அதிக அளவு மக்களால் உணவாக சாப்பிட பயன்படுத்தப்படும் தானியமாக கோதுமை இருக்கிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயலாற்ற உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியமாகும். அதிலும் வைட்டமின் பி சத்து தினந்தோறும் சாப்பிடும் உணவில் இடம் பெற வேண்டும். கோதுமையில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு, இந்த வைட்டமின் பி சத்து அதிகம் கிடைத்து நாள் முழுவதும் உடல் மற்றும் மனச் சோர்வு ஏற்படாமல் காக்கிறது. உடல் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருக்கவும் உதவுகிறது.

8. வெள்ளை சுண்டல் இன் நன்மைகள்

இந்த வெள்ளைச் உடலில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் உள்ளது. இவைகள் உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

9. ஜாதிக்காய்

மன அழுத்த பிரச்சினையை சரிசெய்ய ஜாதிக்காயை ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. இரவு உறங்குவதற்கு முன் ஜாதிக்காய் பொடியை பசும்பால் கலந்து சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறையும்

10. ராகி

ராகியில் அதிக அளவு கால்சியம் இருப்பதால்‌ எலும்பு மற்றும் பற்களுக்கு நல்ல உறுதியை தருகிறது. இதை கோடை காலத்தில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது ஏனென்றால் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது அதிக அளவு புரதச் சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிறைந்து இருக்கிறது.

ராகியில் அதிக அளவு உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம். உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இந்த ராகி சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவாக இருக்கும்.

குழந்தைகளுக்கு சிறுதானிய சத்துமாவு பாகம்1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top