மா இலையின் மருத்துவ பயன்கள் | மா இலை தோரணம்

மா இலை

சமீபத்தில் நாங்கள் புதிதாக கட்டிய வீட்டில் புதுமனை புகுவிழா நடத்தினோம். அப்பொழுது எங்கள் வீட்டிற்கு வந்த சுவாமிகள் ஒரு கொத்து மாவிலையை எடுத்து ஒரு கலசத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் வைத்தார். பின்பு தீர்த்தம் கொடுப்பதற்கு பஞ்சபாத்திரதில் உத்திரணிக்குப் பதிலாக ஒரு மாவிலையை வைத்தார்.

வாசலில் உள்ள கேட்டின் இரண்டு பக்கங்களிலும் ஒரு மாவிலை கொத்தைவைக்கச் சொன்னார். வீட்டின் நிலவில் மாவிலைத் தோரணம் கட்டச் சொன்னார். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையின் நிலவிலும்மாவிலைத் தோரணம் கட்டச் சொன்னார். வீட்டைச் சுற்றி தீர்த்தம் தெளிக்கும் பொழுதும் மாவிலைக் கொத்தையே உபயோகப்படுத்தினார். மா இலையின் தார்பரியத்தை அவரே கூறினார். மாவிலைத் தோரணம் கட்டும் பொழுது பச்சை பசுமையாகவும், அழகாகவும், புனிதமாகவும் இருக்கும்.

மாவிலைப் பற்றிய நுட்பமானமும் சுட்சமும் ஆன சில நன்மைகளை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மாவிலையின் ஆற்றல் மிகவும் அற்புதமானது ஏனென்றால் அவ்வளவு சீக்கிரம் இந்த இலை பசுமையிலிருந்து காயாது அப்படியே காய்ந்தாலும் இதன் ஆற்றல் குறையாது. துளசிக்கு இருக்க கூடிய அத்தனை சிறப்புகளும் இவ்விலைக்கு உண்டு. நம் வீட்டின் வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைப்பது போல் வளர்பிறை சனிக்கிழமை அன்று நிலவு படியில் மாவிலைத் தோரணம் கட்டுவது என்பது சாலசிறந்தது.

மாவிலையின் மிக சிறப்பாக கூறப்படுவது என்ன என்றால் எத்தகைய எதிர்மறை சக்தியையும் தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. மாவிலையை ஒரு மிக சிறந்த கடத்தி என்று கூறுவார்கள் ஏனென்றால் ஒரு கலசத்தின் மேல் தேங்காய் அதற்கு அடியில் மாவிலையின் காம்புகள் கலசத்தில் உள்ள நீரினைத் தொட்டுக் கொண்டு இருக்கும் ஏனென்றால் கலசத்திலுள்ள நீருக்கு மந்திர சக்தியினை மாவிலை கடத்துகிறது. எல்லா விதமான தோஷங்கள்,எதிர்மறை அதிர்வுகள், கெட்ட எண்ணங்கள், திருஷ்டிகள் இவைகளை எல்லாம் வீட்டின் உள்ளே வராமல் தடுக்கும் சக்தி இம்மாவிலைக்கு உண்டு.அதனால் தான் பல சுப காரியங்கள் நடக்கும் இடங்களில் மாவிலைத் தோரணம் கட்டப்படுகிறது.மாவிலைக்கு மந்திர சக்தியினை கிரகிக்க கூடிய ஆற்றல் வாய்ந்தது.

மா இலை தோரணம்

பொதுவாக நமது மரபில் மூன்று வகையான கனிகளைத் தான் முக்கனிகள் என்று கூறுவார்கள். மா,பலா,வாழை இலை மூன்றும் தான் முக்கனிகள் என்று கூறப்படுகிறது. இதில் முதலாவதாக இருப்பது மா.புனிதவதியார் என்ற அம்மையார் கரைக்கால் அம்மையாராக மாற காரணமாக இருந்தது இந்த மாங்கனிதான்.அதனால் தான் மாங்கனி திருவிழா கரைக்காலில் மிக விஷேசமாக கொண்டப்படுகிறது. மா என்றால் எதிர்ப்புகளை தாங்க கூடியது,பெரியது, பெருமையுடையது, மகாலட்சுமி,அன்னை என்று அர்த்தம்.

தலைவாசலில் பல விஷயங்கள் உண்டு.ஏனென்றால் இங்கு தான் வா தேவதை இருக்கிறது.வா தேவதை என்றால் பேச்சுக்கான தேவதை தலைவாசலில் வசித்துக் கொண்டு இருக்கிறது அதனால் தான் அந்த இடத்தில் மாவிலைத் தோரணம் கட்டினால் எந்த விதமான எதிர்மறையான சொற்களும் அந்த வீட்டில் வந்து சேராமல் தடுத்து விடக்கூடிய ஆற்றல் மாவிலைக்கு உண்டு.

மா இலைக்கு நிறைய மருத்துவக் குணங்களும் உண்டு.சித்த வைத்தியத்தில் இவ்விலை மிகவும் பயன்படுத்தப்படுகிறது.மா கொழுந்தை மென்று தின்றால் வாய் புண்ணையும்,வாயிற்று புண்ணையும் ஆற்றும், வீக்கத்தையும்,சிறு கட்டிகளையும் கரைக்கும்.மா இலையை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் சிறுநீர் அதிகமான முறையில் பிரியும். மா இலையில் வைட்டமின் A B C மற்றும் புரதம் இருக்கிறது.இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மா இலையினைப் பயன்படுத்தி நாமும் சிறப்பு அடைவோம்.

மா இலையின் மருத்துவ பயன்கள் | மா இலை தோரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top