கீழாநெல்லி செடியின் மருத்துவ பயன்கள்

கீழாநெல்லி

கீழா நெல்லி செடி வகையைச் சேர்ந்தது. இரண்டு அல்லது மூன்று கிளைகளுடன் வளரும் செடியிது. ஈரப் பகுதியான வாய்க்கால் ஓரம், வயலின் வரப்பு, வேலி ஓரங்களில் மற்ற செடிக்கு ஊடே இது வளரும். ஆலமரம் போன்ற பெரிய மரங்களின் நிழலில் வளர்ந்திருக்கும் பலசெடிகளினூடே, கீழா நெல்லிச் செடியும் வளர்ந்திருக்கும். மழைக் காலத்தில் செழிப்பாகவும். கோடை காலத்தில் வறட்சியாகவும் தோன்றும்.

தென் பகுதியில் பல இடங்களில் நல்ல நீர் வசதியுள்ள இடங்களில் கீழா நெல்லிச் செடி செழிப்பாக வளர்கிறது.

பொதுவாக கீழா நெல்லிச் செடி 10 முதல் 18 செ.மீ. உயரம் வரை தான் வளரும். ஆனால், வளமான பிரதேசத்தில் 30 முதல் 45 செ.மீ. உயரம் வரை கூட வளரும். இதன் இலைகளும் அளவில் பெரியதாக இருக்கும்.

1. மஞ்சள் காமாலை குணமாக

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கீழா நெல்லி இலையை அம்மியில் வைத்து மை போல அரைத்து, எலுமிச்சம் பழ அளவு விழுதை ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். ஆனால், மூன்று நாட்களிலும் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்.

2. பாம்பு விஷம் முறிய

கீழா நெல்லியிலையில் 10 கிராம் எடுத்து, 5 கிராம் மிளகு சேர்த்து மை போல அரைத்து, நெல்லிக்காயளவு விழுதை வாயில் போட்டுச் சிறிதளவு வெந்நீர் கொடுத்துவிட வேண்டும். அன்று உப்பில்லாமல் பத்தியம் வைத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *