கடுக்காய் மருத்துவகுணங்கள் | கடுக்காய் நன்மைகள் தீமைகள்

கடுக்காய்

வணக்கம், மிக உயரமாக வளரக கூடிய மரம் இனத்தைச் சேர்ந்தது கடுக்காய் மரம். மரங்கள் அடர்ந்த பெரிய காடுகளில் தான் கடுக்காய் மரத்தைக் காண முடியும்.

கடுக்காய் மரம் இந்தியாவிற்கு உரிய ஒரு மரமாகும். விந்திய மலைக்குத் தெற்குப் பகுதியில் வளரும் கடுக்காய் மரங்கள் மிக உயரமாகவும், செழித்தும் வளருகின்றன.

கடுக்காயில் ஏழு வகை உண்டு.

1.அபயன்,
2.விசயன்,
3.பிரிதிவி,
4.சிவந்தி,
5.அமுர்தம்,
6.அரோகினி,
7.திருவிருத்தி,

இவற்றிலும் சில வகை உண்டு. அவை.

1.பால் கடுக்காய்,
2.செங் கடுக்காய்,
3.கருகடுக்காய்.

ஏழுவகையான கடுக்காய்களின் குணங்கள்.

1. அபயன் கடுக்காய்

இந்த வகைக் கடுக்காய் உருண்டு, திரண்டு சுமார் ஐந்து சென்டி மீட்டர் நீளமுள்ளதாக இருக்கும். இது சற்று கருநிறமாகத் தோன்றும். இதன் குணம் என்னவென்றால். தேகத்தில் ஏற்படும் வலிகளைப் போக்கும். நெஞ்சில் கட்டியிருக்கும் கோழையை உடைத்து வெளியேற்றும். கண் நோயைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கி, மலத்தை இறக்கி வெளியேற்றும்.

2. விசயன் கடுக்காய்

வட இந்தியாவிலுள்ள அடர்ந்த காடுகளில் உயர்ந்து வளரும் மரங்களில் கிடைக்கக் கூடிய இந்த விசயன் கடுக்காய் சாதாரணக் கடுக்காயை விடச் சற்று பருமனாகவே இருக்கும். வாத நோயைக் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.

எல்லா வகையான விஷங்களையும் முறிக்கக் கூடியது.

3. பிரிதிவி

விந்திய மலைக்கு கீழ்ப்பகுதியில் வெகுதூரம் வரை பரவியுள்ள பெருங்காடுகளில் பிரிதிவிக்கடுக்காய்மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இவ் வகைக் கடுக்காயின் மேல்தோல் மெல்லியதாகச் சதையுடன் ஒட்டியிருக்கும். இதன் நிறம் இலேசான மஞ்சள், நிறத்துடனிருக்கும். பித்த சம்பந்தமான எந்தவகைக் கோளாறுகளையும் இந்தக் கடுக்காய் போக்கி விடும். உடலில் நோய் தோன்றாதவாறு உடலைப் பாதுகாக்கும்.

4. சிவந்திக் கடுக்காய்

தென்னிந்தியாவில் அடர்ந்த காடுகளில் இந்த வகைக் கடுக்காய் மரங்கள் ஏராளமாக வளர்ந்திருக் கின்றன. இந்த வகைக் கடுக்காயின் மேல்தோல் பொன் நிறமாக இருக்கும். ஆனால், தோல் சதையுடன் ஒட்டியிருக்கும். இந்தக் கடுக்காய்க்கு மூல நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டு.

உடலில் உற்பத்தியான வாய்வினால் ஏற்படும் அத்தனை கோளாறுகளையும் அடியோடு போக்கும் .

5. அமுர்தக் கடுக்காய்

அடர்ந்த காடுகளில் அங்கொன்றும் இங்கொன்று மாக வளர்ந்திருக்கும் பயங்கரமான ஒரு வகை மரமிது. இந்த மரத்தில் கிடைக்கும் காய்க்கு “அமுர்தக் கடுக்காய்” என்று வைத்திருக்கின்றனர்.

இந்த அமுர்தக் கடுக்காய் மரத்தின் அடியில் மனிதனோ. மிருகமோ, பட்சியோ தங்கினால் சில நிமிடங்களில் அவைகளுக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும்.இந்த அமுர்தக் கடுக்காய் வைத்திய முறைக்கு அவ்வளவாகப் பயன்படுவதில்லை. இதிலும் இரு வகை உண்டு. ஒன்று வெண்ணிறமாக இருக்கும். மற்றது கருநிறமாக இருக்கும்.

6.ரோகினிக் கடுக்காய்

கன்னியாகுமரி மாவட்டத்தில் காடுகளிலுள்ள மரங்களோடு சேர்ந்து வளரும் மரமிது. நான்கு பட்டை களுடன் கூடிய இக்கடுக்காய், சற்று சிறியதாகப் பழுப்பு நிறத்துடன் கூடியதாக இருக்கும். இந்தக் காயினுள் இருக்கும் கொட்டை பெரியதாகவும், சதை குறைவாகவுமிருக்கும். “டைபாயிட்” என்ற சந்நி பாதக்காய்ச்சலை வேகமாகக் குணப்படுத்தும் சக்திபெற்றது. சீதள சம்பந்தமான கோளாறுகளை உடனடியாகக் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.

7. திருவிருத்திக் கடுக்காய்

இந்த வகையான கடுக்காய் மரங்கள், சமதள பூமியிலுள்ள காடுகளில் வளர்வதில்லை. உயரமான மலைகளின் மேலுள்ள காடுகளில்தான் வளர்கின்றன. இதை “மொந்தன் கடுக்காய்” என்றும் கூறுகின்றனர். இந்தக்காயின் மேல் மூன்று பட்டைகளிருக்கும். இந்தக் கடுக்காயின் மேல் ஐந்து விதமான நிறங்கள் தோன்றும். இரணங்களை ஆற்றுவதில் முதல் தரமானது. வெண்குஷ்டத்தைப் போக்கும். குஷ்ட நோயைக் கூட குணப்படுத்தும்.கடுக்காயை உடைத்தால் உள்ளே உலர்ந்த சதைப் பற்று இருக்கும். நடுவில், ஈச்சங்கொட்டை போன்ற வடிவத்தில் உறுதியான ஒரு கொட்டை இருக்கும். இதன் தோலும் சதைப்பற்றும்தான் வைத்திய முறைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

8. பால் கடுக்காய்

வெண்ணிறமான பால் கடுக்காய் உடலுக்கு அழகையும் பலத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இது வாதநோயை முற்றிலும் குணப்படுத்தும்.

9. செங்கடுக்காய்

சிவந்த நிறத்துடன் கூடிய செங்கடுக்காய், நரம்பு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும். அறிவை விருத்தி செய்யும். உடல் நிறத்தைப் பொன்னிறமாக்கும். இருமலைக் குணப்படுத்தும். சளியை வெளியேற்றும். உடலில் எந்த விதமான நோயும் தாக்காமல் பாதுகாக்கும்.

10. கருங்கடுக்காய்

கருங்கடுக்காய் சற்று கருநிறமாக இருக்கும். அறிவைத் தெளிவுபடுத்தும் சக்தி இதற்கு உண்டு. இதற்கு மலச்சிக்கலைத் நீக்கும் குணமுண்டு. மலத்தை இறக்கி வெளியேற்றும். வாத, பித்த, கபக் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *