சென்னிமலை முருகர் கோவில்
சென்னிமலை கோயில் வரலாறு குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்னும் சொல்லுக்கு ஏற்ப சென்னிமலையில் முருகன் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் தரைமட்டத்திலிருந்து சுமார் 1475 அடிக்குமேல் உயரத்தில் இந்த மலை அமைந்திருக்கிறது ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் இதுவும் முதன்மை வகிக்கிறது ஈரோட்டிலிருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவிலும் பெருந்துறையில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது கோயில் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று வரலாறு கூறுகிறது.
கோவிலின் சிறப்புகள்
தேவராய சுவாமிகளால் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட தளமாக இத்தளம் விளங்குகிறது மேலும் இரட்டை காளை மாடுகள் படியேறி மலையை அடைந்த அதிசயம் இங்கே அரங்கேறியது. இத்திருக்கோவிலில் அபிஷேகம் செய்யப்படும் தயிர் ஒரு போதும் புளித்துப் போவதில்லை என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
கோவிலின் அமைப்புகள்
தமிழ் கடவுள் முருகன் முருகன் சென்னிமலையில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார் மேலும் வள்ளி தெய்வானை அம்மையார் அமிர்தவல்லி சுந்தரவல்லி என்னும் பெயரில் முருகனை மணம் முடிப்பதற்காக தவம் இருப்பதை போன்று ஒரு சன்னதியும் வள்ளி தெய்வானைக்கு வைக்கப்பட்டுள்ளது. வள்ளி தெய்வானை சன்னதி தொடர்ந்து பின்புறமாக படியேறினாள் பிண்ணாக்கு சித்தர் ஆலயமும் அமைந்துள்ளது பிண்ணாக்கு சித்தர் இவர் 18 சித்தர்களில் ஒருவர் இந்தப் பிண்ணாக்கு சித்தர் நாகினி நாக்கினை பின்னுக்கு மடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு தந்ததால் பிண்ணாக்கு சித்தர் என்று அழைக்கப்பட்டார் அவர் சமாதியான இடம் என்று பிண்ணாக்கு சித்தர் ஆலயம் அழைக்கப்படுகிறது இதில் இன்றளவும் ஒரு துவாரம் வழியாக பலம் பழம் மற்றும் பக்தர்களின் காணிக்கை வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.
முக்கிய தினங்கள்
முருகப் பெருமான் செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் இத்தளத்திற்கு வருகை தந்து முருகனின் அருள் பெற்றுச் செல்கின்றனர் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் மலைப்பகுதியில் சென்று வருவதற்காக சிறப்பு பேருந்துகளும் கோயில் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்கின்றனர் மேலும் ஒரு சில பக்தர்கள் படிகளில் ஏறிச் சென்று ஏறிச் சென்று முருகனின் அருளை பெற்றுச் செல்கின்றனர் சுமார் 1320 படிகளை கடந்து இறைவனை வணங்குகின்றனர் சஷ்டி கிருத்திகை போன்ற திதிகளிலும் இதர நாட்களிலும் இதர முக்கிய நாட்களிலும் விசேஷ பூஜைகளும் நடைபெறும் ஒவ்வொரு நாளும் மதியம் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் கோயில் வளாகத்தில் வேங்கை தேர் இழுக்கப்படுகிறது பக்தர்கள் தங்களின் வேண்டுகோளை முன்னிட்டு வேண்டுதலை முன்னிட்டு தொடர்ந்து 12 வாரங்கள் மலையேறி முருகனை வழிபட்டு வந்தாள் தடைபட்டு இருக்கும் நல்ல விஷயங்கள் எளிதில் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.
பவுர்ணமி கிரிவலம்
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதி என்று பெரும்பாலான மக்கள் கிரிவலம் வருகின்றனர் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவினை உடையது இந்த கிரிவலப் பாதை இரவு வேளையில் வரும் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் மாலை 6 மணிக்கு அடிவாரத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து பௌர்ணமி கிரிவலத்தை பக்தர்கள் தொடங்குகின்றனர் அவ்வாறு கிரிவலம் செல்லும் வேளையில் பக்தர்களுக்கு ஏற்படும் களைப்பை போக்க ஆங்காங்கே ஒருசில பக்தர்கள் தங்களால் முடிந்த அளவு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு நீர்மோர் பானகம் மற்றும் உணவு போன்றவற்றை வழங்குகின்றனர் கிரிவலம் வரும் பக்தர்கள் தலைக்கு நீராடி உப்பு இல்லாத உணவினை உண்டு தங்களது விரதத்தைத் கடைபிடிக்கின்றனர்.